15 வயதில் சர்வதேச போட்டியில் சதம் - வரலாறு படைத்த ருவாண்டா வீராங்கனை
15 வயதில் சர்வதேச T20 போட்டியில் சதம் அடித்து ருவாண்டா வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.
15 வயதில் சர்வதேச T20 சதம்
நைஜீரியா அழைப்பு மகளிர் டி20 தொடரில், ருவாண்டா மற்றும் நைஜீரியா மகளிர் அணி மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய ருவாண்டா அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நைஜீரியா மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 88 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
இதன் மூலம், 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பெற்றது ருவாண்டா மகளிர் அணி.
இந்த போட்டியில், 65 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்த ருவாண்டா விக்கெட் கீப்பர் ஃபன்னி உடகுஷிமானின்டே (Fanny Utagushimaninde) இள வயதில் சர்வதேச T20 போட்டியில் சதமடித்த கிரிக்கெட்டர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

உகாண்டா வீராங்கனை புரோஸ்கோவியா அலாகோ, 16 வயது மற்றும் 233 நாட்களில் சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
15 வயது மற்றும் 223 நாட்களில், நேற்றைய போட்டியில் சதமடித்து ஃபன்னி உடகுஷிமானின்டே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட்டில், 18 வயது மற்றும் 280 நாட்களில் சதம் அடித்த பிரான்ஸ் வீரர் குஸ்டாவ் மெக்கியோன், மிக இளைய வீரர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார்.
மேலும், சர்வதேச T20 போட்டியில் அறிமுக போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அறிமுக சர்வதேச T20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டன் ஆட்டமிழக்காமல் எடுத்திருந்த 96 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |