Ball Tampering சர்ச்சையில் சிக்கிய CSK - வைரலாகும் வீடியோ
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் CSK அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
CSK vs MI போட்டி
நேற்று ஐபிஎல் தொடரின் 2வது நாளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியில், 5 முறை கோப்பையை வென்ற CSK மற்றும் MI அணிகள் மோதியது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது.
CSK தரப்பில், பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து, 156 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 19.1 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
மும்பை அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் புத்தூர், தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு
இந்நிலையில் CSK அணித்தலைவர் ருதுராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருவரும் சேர்ந்து பால் டேம்பரிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
Ball Tempering 😅
— Rajat Yadav (@rajatyadav_26) March 24, 2025
CSK is a Always fixer team 😅#CSK #CSKvsMI #IPL #IPL2025 #TATAIPL2025 #TATAIPL #balltempering #Dhoni #dhobi @ChennaiIPL @RCBTweets @IPL @StarSportsIndia @JioHotstar @IrfanPathan pic.twitter.com/2Yp5EQbSIA
இதில், கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை ருதுராஜிடம் கொடுக்கிறார். ருதுராஜ், அந்த பொருளை மறைத்தவாறே தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்.
இதனால் இருவரும் சேர்ந்து பால் டேம்பரிங் செய்ததாக மற்ற அணியின் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடரில், CSK அணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிசிசிஐ விசாரித்து, குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் CSK அணியை தடை செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும், தனது கையில் இருந்த மோதிரத்தையே ருதுராஜிடம் கொடுத்ததாகவும் CSK ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன தண்டனை?
2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் லீக் கிரிக்கெட்டில் விளையாட 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை காரணமாக, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணியின் அணித்தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அணித்தலைவராக இருந்த டேவிட் வார்னருக்கும் அந்த ஐபிஎல் தொடரில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |