இவ்வளவு மோசமாக வைத்திருப்பதா? BCCI-யை விளாசித் தள்ளும் ரசிகர்கள்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, மைதானத்தின் இருக்கைகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணி ஆதிக்கம்
மும்பை வான்கடே மைதானத்தில் மகளிர் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 406 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 219 மற்றும் 235/5 (3ஆம் நாள் முடிவில்) ஓட்டங்களும் எடுத்துள்ளன.
X/Bcci
நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. தற்போது வரை இந்திய அணியின் கையே இப்போட்டியில் ஓங்கியுள்ளது.
படுமோசமான இருக்கைகள்
இந்த நிலையில் மற்றொரு விடயம் இப்போட்டி தொடர்பாக விவாத பொருளாக மாறியுள்ளது. அதாவது, மைதானத்தில் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட இருக்கைகள் மோசமாக இருந்துள்ளது தான் அதற்கு காரணம்.
AP image
இப்போட்டி நான்கு நாட்கள் கொண்டது என்பதால் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் தான் மைதானத்திற்கு வருகை தந்தனர். அதனால் கூட்டம் குறைவாக இருக்கும் என கருதிய மைதான நிர்வாகம், ஒரு பகுதியில் மட்டுமே ரசிகர்கள் அமர இருக்கைகள் ஒதுக்கியது.
மேலும், இதர பகுதிகளை மைதான அதிகாரிகள் அடைத்து விட்டனர். அங்கு சென்று அமர வேண்டும் என்றால் டிக்கெட் வாங்கித் தான் செல்ல வேண்டும்.
ரசிகர்கள் ஆதங்கம்
ஆனால், அந்த இருக்கைகள் எல்லாம் பறவைகளில் எச்சத்தினால் அசுத்தமாகி இருந்தது. ஊழியர்கள் அதனை சுத்தம் செய்யாத நிலையில் அதற்கான டிக்கெட்டுகளை மைதான அதிகாரிகள் விற்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், ஊழியர் ஒருவரிடம் முறையிட அவரோ அங்கே உட்காருங்கள் என்று கூறிவிட்டாராம்.
இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அந்த இருக்கைகளை புகைப்படம் எடுத்து, இணையத்தில் பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அத்துடன் மும்பை கிரிக்கெட் அமைப்பு மற்றும் BCCI-யை கடுமையாக விளாசி வருகின்றனர்.
X (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |