கிரிக்கெட் வீரரின் மனைவியை குறிப்பிட்டு.. மிகவும் கீழ்த்தரமான செயல்! முன்னாள் வீரரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரின் மனைவியை ஒப்பிட்டு மோசமாக விமர்சனம் செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கரை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மையர் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
Photo Credit: PTI
முன்னதாக அவர் களத்தில் இருந்தபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் சுனில் கவாஸ்கர் அவரை commentary செய்த விதம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Photo Credit: AFP
அதாவது, ஹெட்மையரின் மனைவிக்கு இப்போது தான் delivery ஆனது. அவர் மனைவி deliver செய்துவிட்டார், ஹெட்மையர் பேட்டிங்கில் deliver செய்வாரா என்று பார்க்கலாம் என்று கவாஸ்கர் விமர்சனம் செய்தார்.
இதனை கவனித்த ரசிகர்கள் கவாஸ்கருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும், நிதானமாக பேசுங்கள், நீங்கள் பேசுவது அசிங்கமாக உள்ளது என்றும் பலர் அவரை வசைபாடி வருகின்றனர்.
கவாஸ்கர் இதற்கு முன்பு ஒருமுறை, விராட் கோலி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா சர்மா தான் காரணமாக இருந்திருப்பார் என மோசமாக கருத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"Shimron Hetmyer's wife has delivered, will he deliver now for the Royals".
— Nikhil Rajput (@CricCrazyNikk) May 20, 2022
Sunil Gavaskar such a shameless guy ?
Sunny G comments is more worst than this year’s umpiring ? #CSKvsRR #SunilGavaskar
— J? (@jenzbenzy) May 20, 2022