இவ்ளோ மோசமா ஆடுறாரு! ஓய்வு பெற சொல்லுங்க... இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் மீது ரசிகர்கள் கோபம்
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் அணியின் சீனியர் வீரருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அப்போது கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் புஜாரா களத்தில் இருந்தனர்.
இதனை அடுத்து கடைசி நாளான நேற்றைய ரிசர்வ்டே ஆட்டத்தில் இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசனின் ஓவரில், விராட் கோஹ்லி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
@BCCI Time to get retirement from International cricket @ Pujara
— Jagan (@Jagan68299457) June 23, 2021
Not performing India and outside India for the last 5 test Series
Kohli time to resign from captaincy. Last year I told he will never win a single ICC trophy as a captain in future as well.
பின்னர் 170 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி தட்டிச்சென்றது.
இந்த நிலையில் இந்திய வீரர் புஜாராவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக இருந்து வரும் புஜாரா, சிறப்பாக செயல்பட்டு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடியவர்.
When will you ask Pujara to retire ?
— KVS Subramanian (@kvsmanian1411) June 23, 2021
ஆனால் கடந்த சில போட்டிகளில் அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும்படியாக இல்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவரது ஆட்டம் மோசமாகவே இருந்தது.
முதல் இன்னிங்ஸில் 8 ரன்னும், 2-வது இன்னிங்ஸில் 15 ரன்களும்தான் புஜாரா எடுத்தார். இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Pujara need to retire now. Bumrah need to focus only short format, Siraj is the best option in test cricket ? .
— Mintu Saha (@Jksaha7Mintu) June 23, 2021