கொஞ்சம் கருணை காட்டுங்கள்... ரசிகர்களை மகிழ்ச்சியில் அலறவிட்ட பிரான்ஸ் அணி
யூரோ கிண்ணம் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜிப்ரால்டர் அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி துவம்ஸம் செய்துள்ளது.
தகுதிச் சுற்று வரலாற்றில்
ஐரோப்பிய சேம்பியன்ஷிப் தகுதிச் சுற்று வரலாற்றில் மிகவும் கொடூரமான முடிவு இதுவெனவும் கொண்டாடப்படுகிறது. PSGயின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி 14-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை துவைத்தெடுத்துள்ளது.
@getty
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தை கண்டுகளித்த ரசிகர்கள், ஒருகட்டத்தில் கொஞ்சம் கருணை காட்டுங்கள், இனி கோல் அடிக்க வேண்டாம் என கெஞ்சும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
உலக கால்பந்து தரவரிசையில் 198வது இடத்தில் இருக்கும் ஜிப்ரால்டர் அணி யூரோ கிண்ணம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் கைலியன் எம்பாப்பே மூன்று கோல்களை பதிவு செய்ய, கிங்ஸ்லி கோமன், ஆலிவர் ஜிரோட் ஆகியோர் தலா இரண்டு கோல்களை பதிவு செய்துள்ளனர்.
பிரான்ஸ் அணியின் 6 வீரர்கள்
ஆனால் பிரான்ஸ் அணியின் 6 வீரர்கள் தங்கள் வலையிலேயே பந்தை அடித்து கோல் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் 14வது கோலை பதிவு செய்துள்ளார் ஆலிவர் ஜிரோட்.
@getty
பிரான்ஸ் அணியின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ரசிகர்கள் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், அந்த நாட்டை அவமானப்படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ரசிகர் ஒருவர் இந்த ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |