பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா - சதமடித்த திலக் வர்மாவை விமர்சிக்கும் ரசிகர்கள்
fans blames tilak varma for india a loss vs pakistan a: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரில் இந்திய ஏ அணி, பாகிஸ்தான் ஏ அணியிடம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், திலக் வர்மாவின் மெதுவான ஆட்டமே தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா ஏ அணி
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண 2026 தொடர் நவம்பர் 19 ஆம் திகதி தொடங்கி, நவம்பர் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் நேற்று தோகாவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி, 49.2 ஓவர்களில் 313 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79 ஓட்டங்களும், மாஸ் சாதகத் 59 ஓட்டங்களும், பர்ஹான் யூசுப் 56 ஓட்டங்களும் எடுத்தனர்.
314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 49.1 ஓவரில் 265 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், பாகிஸ்தான் ஏ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் திலக் வர்மா சதமடித்தாலும் அவரின் நிதானமான ஆட்டமே அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அபிஷேக் சர்மா 42 பந்துகளில், 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 70 ஓட்டங்கள் குவித்து அதிரடி காட்டிய நிலையில், திலக் வர்மா 142 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து 67.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 100 ஓட்டங்கள் குவித்து மெதுவாக ஆடியதால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.