இங்கிலாந்து தோல்வியால் வெடித்தது வன்முறை! ரசிகர்கள் வெறியாட்டம்- 49 பேர் கைது
யூரோ கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் வன்முறையில் ஈடுபட்டவர்களை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
யூரோ கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இங்கிலாந்தின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.
லண்டனில் உள்ள பல முக்கியச் சாலைகளில் திரண்ட ரசிகர்கள், தெரு விளக்குகள், பேருந்துகள் மீது ஏறி பாட்டில்களை சாலைகளில் வீசினார்கள்.
தொடர்ந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், 49 பேரை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி மெட்ரோபாலிடன் போலீஸ் டுவிட்டரில், யூரோ 2020 போட்டிக்கான பாதுகாப்பு முடிவுக்கு வருகிறது.
பொறுப்புடன் நடந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்துள்ளோம்.
இந்த வன்முறையை தடுக்கும் முயற்சியில், 19 அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, லண்டனை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.