மைதானத்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறு! தோனி, தோனி என கத்தி கோஷமிட்ட ரசிகர்கள் வீடியோ
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை கோட்டை விட்ட தினேஷ்க் கார்த்திக்.
ஆதங்கத்தில் தோனி, தோனி என கத்திய ரசிகர்கள்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் தினேஷ் கார்த்திக் எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார்.
இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டனர்.
அப்போது 8வது ஓவரில் பாஸ் டீ லீடிக்கு அக்சர் பட்டேல் பந்து வீசினார். அந்த பந்தை ஏறி சிக்சருக்கு அடிக்க பாஸ் நினைத்த நிலையில் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கைக்கு சென்றது.
— MINI BUS 2022 (@minibus2022) October 27, 2022
ஆனால் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்காததால் எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ’தோனி தோனி’ என கரகோஷமிட தொடங்கினர்.
ஏனெனில் ஸ்டெம்புக்கு பின்னால் விக்கெட் கீப்பராக அவர் எப்படி திறம்பட செயல்படுவார் என்பதை அவர்கள் நினைவுக்கூரவே கரகோஷமிட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.