முரளி விஜய் முன் தினேஷ் கார்த்திக் பெயரை கோஷமிட்டு சங்கடப்படுத்திய ரசிகர்கள்! அவர் தந்த ரியாக்ஷன் வீடியோ
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் பீல்டிங்கில் இருந்த முரளி விஜய் முன் தினேஷ் கார்த்திக் பெயரை ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முரளி விஜய் விளையாடி வருகிறார்.
நேற்றைய போட்டியில் முரளி விஜய் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கேலரியில் இருந்த ரசிகர்கள் ’DK...DK' என தினேஷ் கார்த்திக் பெயரை சொல்லி கோஷமிட்டனர்.
இது முரளி விஜய்க்கு அசௌகரியமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கோஷமிடுவதை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
#TNPL2022 DK DK DK ......
— Muthu (@muthu_offl) July 7, 2022
Murali Vijay reaction pic.twitter.com/wK8ZJ84351
தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இடையே ஒரு பிரச்சனை முன்னர் இருந்துள்ளது. அதாவது தினேஷ் கார்த்திக் முதல் மனைவி நிகிதாவும், முரளி விஜய்யும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்தனர்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்தார். பின்னர் நிகிதாவும், முரளி விஜய்யும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு முரளி விஜய்யுடன் மனஸ்தாபமும் ஏற்பட்டது.
இதன்பிறகு அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.