விரக்தியில் மண்டியிட்டு அமர்ந்த ரொனால்டோ! மெஸ்ஸி..மெஸ்ஸி என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய ரசிகர்கள் (வீடியோ)
அல் ஹிலால் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி ரசிகர்களால் ரொனால்டோ கிண்டல் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Al-Awwal மைதானத்தில் நடந்த சவுதி புரோ லீக் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. ஆனால் முதல் பாதியின் நடுவில், பாக்ஸுக்குள் இருந்து அடித்ததால் கோல் வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.
Eu sou fã do Messi mas tenho que admitir que a arbitragem lá na Arábia Saudita não para de perseguir o Cristiano Ronaldo…
— Lionel Messi Brasil (@LM10Brasil) May 17, 2024
Olha esse THREAD de lances em que o juíz perseguiu o CR7 ???pic.twitter.com/4fTfk3Y1Na
அதேபோல் 80வது நிமிடத்தில் அவர் அடித்த ஷாட் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த ரொனால்டோ, மைதானத்தில் மண்டியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது மைதானத்தில் குழுமியிருந்த மெஸ்ஸி ரசிகர்கள் ''மெஸ்ஸி..மெஸ்ஸி..'' என கூச்சலிட்டு அவரை வெறுப்பேற்றினர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஜாம்பவான்களாக வலம் வந்தாலும் அவர்களில் சிறந்த வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவுகிறது.
?? SCÈNE CHOQUANTE
— De Jonginho ?? fan (@_DeJonginho) May 17, 2024
Les fans de Al Hilal chantent « Messi, Messi, Messi » et Cristiano Ronaldo n’en peut tellement plus qu’il tombe à terre, à deux doigts de pleurer.
Comment c’est possible d’avoir 39 ans et d’être aussi complexé ??? ???
pic.twitter.com/klBBontrGj
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |