மைதானத்தில் மேஜிக் செய்த ஜோ ரூட்! ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது பேட்டை தரையில் நிற்க வைத்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி லாட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதம் விளாசினார். மேலும் இளம் வயதில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த நிலையில் இணையத்தில் ஜோ ரூட் தொடர்பான வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின்போது, மறுமுனையில் நின்றிருந்த ஜோ ரூட்டின் பேட் அவரது கையில் இல்லாமல் தரையில் தானாக நின்றிருந்தது.
Seriously is that bat holding itself up or is Joe Root even more of a magician?? @BumbleCricket @root66 #ENGvsNZ pic.twitter.com/bcHVvPngY4
— Webbo (@WebboOne) June 5, 2022
பந்துவீச்சாளர் பந்து வீச ஓடி வந்தபோது ரூட் பேட்டை கையில் எடுத்துக் கொண்டார். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
ரூட் என்ன மேஜிக் செய்கிறாரா என குழம்பிய ரசிகர்கள், அவர் தனது பேட்டின் அடிப்பகுதியை தட்டையாக செய்துவிட்டாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.