ஆமைவேக தொடக்கம்..சுயநலமாக ஆடினாரா ராகுல்? ரசிகர்கள் கடும் விமர்சனம்
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, பெங்களூரு நிர்ணயித்த 208 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான கே.எல்.ராகுல் பவர்பிளேவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தனது இன்னிங்சை அவர் நிதானமாக தொடங்கினார். பவர்பிளேயில் அவர் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் லக்னோவின் வெற்றிக்கு ஓவருக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ராகுல், 10 ஓவர்கள் முடிவில் 32 பந்துகளில் 37 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
Photo Credit: BCCI/PTI
அதன் பின்னர் 43வது பந்தில் அரைசதம் அடித்த அவர், 58 பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் களத்தில் இருக்கும் வரை எப்படியும் லக்னோ அணி வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவரோ தனது விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற நிலையில் விளையாடி போல் இருந்தது.
Photo Credit: IPL
லக்னோ அணியின் தோல்விக்கு காரணம் ராகுல் ஆடிய விதம் தான் என்பது போல் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிறந்த வீரர் என்பவர் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பெற வைப்பவர் தான். இப்படி அரைசதம் அடித்துவிட்டு ஆட்டமிழப்பவர் அல்ல என சிலர் அவரை விமர்சித்துள்ளனர்.
This is What happens when you Play for Personal Records.. Not Showing intent of hitting when things were in your favour then started hitting when match going far away from you.. That's not worth it. @klrahul #IPL2022#LSGvRCB
— Meet Murdock (@MeetMurdock211) May 25, 2022
Slow start ?
— AkHiLeSH RRReDdY (@akhileshreddie) May 25, 2022
Build innings ?
Accelerate ?
Not finished the game ?
? KL RRRahul?? #LSGvRCB@klrahul #IPL2022 pic.twitter.com/1eKBspETi0