இவர் செய்த தவறால தான் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் மண்ணை கவ்விச்சு! இப்படி பண்ணிட்டாரே... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்ததற்கு ஜோ ரூட்டின் தவறான கேப்டன்ஸியே காரணம் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி 209/8 எனத் திணறிக் கொண்டிருந்தது. அப்போது முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பௌலர்கள் அடிக்கடி பவுன்சர் வீசினார்கள். பீல்டர்களும் பவுண்டரி லைன்வரை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
பீல்டர்கள் அருகில் இல்லாததாலும், இவர்கள்தான் ஷார்த் பந்துகளைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட ஷமி, பும்ரா இருவரும் முன்கூட்டியே அதற்குத் தாயாராக அபாரமாக விளையாடி கிட்டதட்ட 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்கள் குவித்ததால், இங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தியது. எப்போதும்போல், சரியான லென்த்தில் பந்துவீசியிருந்தாலே, அது நல்லமுறையில் ஸ்விங் ஆகியிருக்கும், டெய்ல் என்டர்ஸை சுலபமாக வீழ்த்தியிருக்கலாம்.
பீல்டர்களை பவுண்டரி லைன் வரை ஆங்காங்கே நிறுத்தி வைத்ததும் மிகப்பெரிய தவறு என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இங்கிலாந்து நாட்டின் நெட்டிசன்களும்தான். பும்ரா, ஷமி இருவரும் கிட்டதட்ட 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்திய அணி, அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் பவுன்சர் பந்துகளை மட்டும் அதிகம் பயன்படுத்தியதால், இந்திய டெய்ல் என்டர்ஸ் சுலபமாக ரன்களை குவித்து, அவுஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினர்.
மீண்டும் அதை போன்ற செயலை இங்கிலாந்தும் செய்த நிலையில் அணியின் கேப்டன் ஜோ ரூட் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.