தவறு செய்யாத அஸ்வினை முறைத்த ராஜஸ்தான் வீரர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் ஆனதால் அஸ்வினை முறைத்த ரியான் பராக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் குவாலிபையர் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 188 ஓட்டங்கள் சேர்த்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தை அஸ்வின் எதிர்கொண்டார். மறுமுனையில் ரியான் பராக் இருந்தார்.
அப்போது பந்து வைடாக வீசப்பட்டதால் கீப்பரிடம் சென்றது. அஸ்வின் ரன் ஓட முயற்சிக்காமல் இருந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த ரியான் பராக், வேகமாக ரன்னுக்காக ஓடி வந்துவிட்டார்.
— Yashi (@Smash_Jaiswal) May 24, 2022
இதனை அஸ்வின் சற்றும் எதிர்க்கவில்லை. உடனே கீப்பர் சாஹா பந்துவீச்சாளர் தயாளிடம் பந்தை வீச, அவர் பாரக்கை ரன்-அவுட் செய்தார். இதனால் விரக்தியடைந்த பராக் தவறிழைக்காத அஸ்வினை பார்த்து முறைத்தபடி நின்றார். ஆனால் அஸ்வின் அவரை கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் பராக் பெவெலியயனுக்கு திரும்பினார்.
Twitter/@Smash_Jaiswal/screengrab
இந்த நிலையில், அஸ்வினை பார்த்து ரியான் பராக் முறைத்ததற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விராட் கோலியை போன்று திமிராக பராக் களத்தில் நடந்துகொள்கிறார், ஆனால் அவரது ஆட்டம் கோலியை போல் இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர். ரசிகர்கள் மட்டுமன்றி, மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவும் ட்விட்டரில் ரியான் பாரக்கை கிண்டலாக விமர்சித்துள்ளார்.
Amazing attitude on the field ?#riyanparag #RRvGT
— Surya Kumar Yadav (@surya_14kumar) May 24, 2022
riyan parag wanting the strike like he is better batsman than ashwin?#IPL2022 #RRvsGT #IPLplayoffs
— Nipun (@Nipun54790788) May 24, 2022
Ashwin rates Parag below himself as a batter. ?
— Silly Point (@FarziCricketer) May 24, 2022