சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான சாதனையிலிருந்து தப்பிக்குமா? KKRயுடன் மோதல்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோசமான தோல்வியில் இருந்து தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர் தோல்விகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள CSK அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அணித்தலைவர்
இப்போட்டியிலும் CSK தோல்வியுற்றால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக சந்திக்கும் ஐந்தாவது தோல்வியாக அமையும்.
இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்றிருந்தது.
இதற்கிடையில் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறியதால், அவருக்கு பதிலாக தோனி தலைமை தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |