இனி மஞ்சள் ஜெர்சியில் ரெய்னாவை பார்க்க முடியாதா? ஏலத்தில் CSK எடுக்கனும்... ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப்படாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா, டோனி, மொயின் அலி, ருத்துராக் கெய்க்வார்ட் ஆகியோரை தக்க வைத்தது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா அணியில் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் தல டோனிக்கு அடுத்து சின்ன தல ரெய்னா என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக முக்கிய நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விளையாடாமல் இருந்த ரெய்னா கடந்த ஆண்டு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்தார்.
இதன் காரணமாக அவர் ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை.
இனி மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் அவரை பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏக்கத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலை ஏலத்திலாவது சென்னை அணி ரெய்னாவை வாங்கும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Hopefully CSK buy Suresh Raina in Auction. We can't see Suresh Raina and MS Dhoni in different Teams.?#MSDhoni || #SureshRaina pic.twitter.com/yCJtUEOESo
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) November 30, 2021