சவுதியில் தரையிறங்கிய மெஸ்ஸி! இன்றைய போட்டியில் ரொனால்டோவுடன் மோதல்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சவுதி அரேபியாவில் தரையிறங்கிய பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நட்பு ரீதியான போட்டி
இன்று நடக்கும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் அணிகள் மோதுகின்றன.
இதற்காக PSG அணியின் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் சவுதியின் ரியாத் நகருக்கு வந்து இறங்கினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் அல் நஸர், அல் ஹிலால் அணிகளின் வீரர்கள் ரியாத் அணிக்காக இணைந்து விளையாடுவார்கள்.
மெஸ்ஸி - ரொனால்டோ மோதல்
எனவே, அல் நஸர் அணிக்கு ஒப்பந்தம் ஆன ரொனால்டோ விளையாடுவார் என்றும், மெஸ்ஸிவுடன் அவருடனான மோதல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
@Twitter(PSG_inside)
இதன் காரணமாக கால்பந்து ரசிகர்கள் இன்றைய போட்டியை காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் அணிகள் மோதிய போட்டியில் மெஸ்ஸி-ரொனால்டோ மோதினர்.
@REUTERS/Ahmed Yosri
மேலும் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் மோதிய போட்டி கோல்கள் இன்றி டிராவானதும் அந்தப் போட்டியில் மட்டும் தான்.