இவரை முதலில் CSK அணியில் இருந்து தூக்குங்க! இல்லேன்னா அணிக்கு ஆப்பு வெச்சிடுவாரு... பிரபல சீனியர் வீரர் மீது ரசிகர்கள் கோபம்
தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீக்க வேண்டும் என கூறி ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐபிஎல் 2021 தொடரில் சென்னை அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை யாதெனில் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம் தான் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது ரசிகர்கள் மற்றொரு குறையும் சென்னை அணியில் இருந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
அதன்படி அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்களை மட்டுமே அடித்துள்ளதாகவும், முக்கியமான நேரத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் ரெய்னா ஆட்டமிழந்து வெளியேறுவதால் அணியின் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் சுரேஷ் ரெய்னாவை எஞ்சியுள்ள சில போட்டிகளில் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரர்களை அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இப்படி செய்தால் போட்டியில் இன்னும் சுவாரசியம் இருக்கும் என்றும் நிச்சயம் அந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.