உயிரை கொடுத்து ஆடியவருக்கு கல்தாவா? நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கழட்டிவிடப்பட்ட இந்திய வீரருக்காக பொங்கும் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரரான விஹாரி சேர்க்கப்படாத நிலையில் அது குறித்த பின்னணி வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மாதம் 25ம் திகதியில் இருந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ரஹானே தலைமையில் இந்திய அணி ஆட உள்ளது. கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக மீண்டும் அணிக்குள் திரும்புவார்.
ரோஹித் சர்மா, பும்ரா, பண்ட், ஷமி ஆகியோருக்கு இரண்டு டெஸ்டில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்குள் விர்த்திமான் சாகா, கே. எஸ் பரத் ஆகிய இரண்டு பேர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஹாரி அணியில் சேர்க்கப்படவில்லை.
கடைசியாக அவுஸ்திரேலியாவில் எஸ்டிஜி டெஸ்டில் கடினமான போட்டியை டிரா செய்ய இவர்தான் காரணமாக இருந்தார். அஸ்வினுடன் இவர் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடினார். 161 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தார். இதுதான் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல காரணமாக இருந்தது.
Where is Hanuma Vihari@Hanumavihari
— Ashish (@Ashish33009216) November 12, 2021
Guess the selectors have forgotten Sydney heroics#TeamIndia https://t.co/SUdUQuvgnh
அந்த போட்டியில் முதுகில் விஹாரிக்கு காயம் இருந்தது. அந்த காயத்தோடு விஹாரி உயிரைக் கொடுத்து ஆடினார். இதுவரை 11 போட்டிகளில் இவர் 624 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இப்படிப்பட்ட வீரரை மொத்தமாக பிசிசிஐ ஒதுக்கி உள்ளது. இவர் கவுண்டி போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.
ஹனுமா விஹாரிக்கு இப்போது வயது 28 ஆகிறது. விஹாரி நீக்கம் ஏன்? இந்திய அணி கில், ஷ்ரேயாஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சிப்பதால் இவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என கூறுகிறார்கள்.
இந்த நிலையில் விஹாரியை அணியில் சேர்க்காமல் விட்டது ஏன் என ரசிகர்கள் டுவிட்டரில் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Is this what you get after a classic knock after saving Team India. If we had lost this match we wouldn't have won the series. Shame. #JusticeforVihari.
— ???????????™ (@Ro45Sharvil) November 12, 2021
Trend this guys.
RT MAX. | @Hanumavihari pic.twitter.com/JAa77PQtlC