இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி; ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி
இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற உள்ள டெஸ்ட் தொடரை மைதானத்தில் இலவசமாக காண இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் உள்ள SSC மைதானத்திலும் தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளையும் இலவசமாக மைதானத்தில் பார்க்கலாம் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான பொது அனுமதி இலவசம் என்பதை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவிக்கிறது. இதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த முன்னெடுப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் உற்சாகத்தை அனுபவிக்குமாறு, நாடு முழுவதிலுமிருந்து கிரிக்கெட் ஆர்வலர்கள், இளம் கிரிக்கெட் வீரர்கள், குடும்பங்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை இலங்கை கிரிக்கெட் அன்புடன் அழைக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |