மெஸ்ஸியால் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் ரசிகர்கள்
மெஸ்ஸியின் மாயாஜாலத்தை எதிர்பார்த்து டிக்கெட் வாங்கிய ஹொங்ஹொங் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்ப அளிக்க நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.
மெஸ்ஸியின் மாயாஜாலம்
ஹொங்ஹொங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் மாயாஜாலம் காண பெருந்திரளான கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
ஆனால் தொடர்புடைய ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த சீனத்து ரசிகர்கள் கோபத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.
தற்போது போட்டியை முன்னெடுத்த நிர்வாகிகள் தரப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பப் பெறலாம் என்றும், ஆனால் சட்ட ரீதியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
7.1 மில்லியன் டொலர்
கட்டணத்தை திருப்பித் தருவதால் 7.1 மில்லியன் டொலர் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் தோராயமாக 4,880 ஹொங்ஹொங் டொலர் செலவிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 38,000 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால், காயம் காரணமாக ஓய்வெடுத்த மெஸ்ஸி, அடுத்த நாள் ஜப்பான் அணிக்கு எதிராக களமிறங்கினார் என்பதே சீனத்து ரசிகர்களை கொதிப்படைய வைத்திருந்தது.