இந்திய அணியில் இடம்பெற ஷாரூக்கான் செய்த காரியம் - என்ன தெரியுமா?
இந்திய அணியில் இடம் பெற தமிழக வீரர் ஷாரூக்கான் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை தமிழக வீரர் ஷாரூக்கான் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை என தமிழ்நாடு அணிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து வரும் ஷாரூக்கான் அடுத்ததாக நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார்.
இவர் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்டிருப்பதால் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கேற்றாற்போல் அவர் எதனால் இடம் பெறுவார் என்பதையும் ரசிகர்கள் விளக்கியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷாரூக்கான் தான் பந்துவீசி பயிற்சி எடுப்பது போன்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் வெறும் பேட்ஸ்மேனாக இருந்தால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.