என் மனைவியை எப்படி தனியாக விட்டு வரமுடியும்? வைரலான இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆஷிஷ் நெகரா ஆகியோர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதில் இருவரும் குடிபோதையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு ராயல்ஸ் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் குஜராத் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் விருந்திற்குப் பிறகு ஒன்றாய் நேரத்தைச் செலவழித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரு இரவு விருந்திற்குப்பின், வீட்டிற்குக் கிளம்பும்போது, ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், சாஹல் போதையில் தள்ளாடுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அந்த சமயத்தில் சாஹல் காரில் செல்ல முயன்ற போது, தன்னுடன் பேருந்தில் வருமாறு நெஹ்ரா அவரை அழைக்கிறார். அப்போது என் மனைவியை எப்படி தனியாக விட்டுவிட்டு வர முடியும் என சாஹல் கேட்க, அவரும் நம்முடன் பேருந்தில் வரட்டும் என நெஹ்ரா கூறுகிறார்.
இந்த வீடியோவில் இருக்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களும் மது போதையில் தள்ளாடுவது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.