ரசிகர்களை கண்கலங்க வைத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா வீடியோ!
தோல்விக்கு பின் சோகத்தில் அமர்ந்திருந்த ரோகித் சர்மாவின் வீடியோ வைரலாகியுள்ளது
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்
உலகக்கோப்பை தோல்வியால் ரோகித் சர்மா மனவேதனையடைந்த வீடியோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
போட்டி முடிந்த பின்னர் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் கைக்கொடுத்த ரோகித் சர்மா, நேராக டக் அவுட்டிற்கு சென்று அமர்ந்தார்.
அங்கு நீண்ட நேரம் தலைகுனிந்தபடி தோல்வியால் மனவேதனையடைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
— Guess Karo (@KuchNahiUkhada) November 10, 2022
இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்கலங்கினர். அத்துடன் இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா, போட்டி அழுத்தத்தை கையாளத் தவறிவிட்டதாகவும், பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.