அடுத்த ஜெயசூர்யாவா இந்த ராஜபக்சே? 50 லட்சமல்ல, 6 கோடிக்கு தகுதியானவர்! ரசிகர்கள் கருத்து
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜெயசூர்யாவைப் போல் பனுகா ராஜபக்சே விளையாடுவதாக, பஞ்சாப் அணி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே, நடப்பு ஐபிஎல் தொடரில் 6 ஆட்டங்களில் 174 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 28 பந்துகளை எதிர்கொண்ட ராஜபக்சே ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசினார்.
அவரது பேட்டிங் ஸ்டைல் இலங்கையின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை போல இருப்பதாக, பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
????? ??????❓?#SaddaPunjab #PunjabKings #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ #GTvPBKS pic.twitter.com/eRebRWuvfg
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2022
அதில் ஜெயசூர்யா மற்றும் ராஜபக்சே இருவரும் ஒற்றை காலை தூக்கி ஒரு ஷாட் அடிக்கும் கட்சி ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், பனுகா ராஜபக்சேவை பஞ்சாப் அணி 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது, ஆனால் அவர் 6 கோடிக்கு வாங்க தகுதியானவர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
cant believe we got him for 50L. Worth 6cr
— honestcriclover (@ImACricFan) May 3, 2022