ரொனால்டோ ஒரு நோய்! அவர் விளையாடும் அணியை மோசமாக்குகிறார், இவர் தான் ஹீரோ..படுமோசமாக விமர்சித்த ரசிகர்கள்
சவுதி புரோ லீக் தொடரின் கடைசி போட்டியில் அல் நஸர் எப்.சி 3-0 என்ற கோல் கணக்கில் அல் படெஹ் அணியை வீழ்த்தியது.
ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய அல் நஸர் எப்.சி
கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் கடைசி சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் எப்.சி அணி களமிறங்கியது. அல் படெஹ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் 4வது நிமிடத்திலேயே அல் நஸர் எப்.சி வீரர் தலிஸ்கா அபாரமாக கோல் அடித்தார்.
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் அவரே இரண்டாவது கோலையும் அடித்தார். 66வது நிமிடத்தில் தலிஸ்கா இந்த கோலை அடித்தார்.
அதற்கு அடுத்த 6 நிமிடங்களில் அல் நஸர் எப்.சியின் முகமது மரன் அசத்தலாக கோல் அடித்தார். இறுதிவரை அல் படெஹ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதனால் அல் நஸர் எப்.சி 3-0 என்ற கோல் கணக்கில் அல் படெஹ்-ஐ வீழ்த்தியது. இது சவுதி புரோ லீக்கில் அல் நஸர் எப்.சி அணியின் 20வது வெற்றியாகும்.
ரொனால்டோவை விளாசும் ரசிகர்கள்
இந்நிலையில், ரொனால்டோவை விட இரண்டு கோல் அடித்த தலிஸ்கா தான் சிறந்த வீரர் என்றும், அவர் விளையாடும் ஒவ்வொரு அணியையும் மோசமாக்குகிறார் என்றும் அல் நஸர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
Getty
அதேபோல் இரண்டு கோல்கள் அடித்த பிரேசிலிய வீரர் ஆண்டர்ஸன் தலிஸ்கா தான் உண்மையான ஹீரோ எனவும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
சவுதி ப்ரோ லீக் கிளப்பில் ரொனால்டோ அறிமுகமானதில் இருந்து, 19 போட்டிகளில் 14 கோல்கள் அடித்ததுடன் இரண்டு கோல் உதவிகளையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.