மெஸ்ஸி..மெஸ்ஸி என கத்தி ரொனால்டோவை கடுப்பேற்றிய ரசிகர்கள்! சொந்த மைதானத்தில் படுதோல்வி
அல் நஸர் அணி சவுதி புரோ லீக் தொடரில் அல் டாவ்வுன் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
சொந்த மைதானத்தில் படுதோல்வி
KSU மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் டாவ்வுன் அணிகள் மோதின. இதில் அல் டாவ்வுன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் நஸரை வீழ்த்தியது.
அல் நஸர் தனது சொந்த மைதானத்தில் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, ரொனால்டோ சில கோல் முயற்சிகளை தவறவிட்டபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ''மெஸ்ஸி..மெஸ்ஸி'' என கூச்சலிட்டு அவரை வெறுப்பேற்றினர்.
Al Nassr fans started asking for Messi after Ronaldo’s freekick almost offed a steward ?pic.twitter.com/V3BdBge9ev
— Thechoco_tribe (@Debbybruno3) August 19, 2023
சொதப்பிய மெஸ்ஸி
அல் நஸர் வீரர் சாடியோ மானே அடித்த கோல் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டது. அதே போல் ரொனால்டோ அடித்த ஷாட் கோல் போஸ்ட் கம்பத்தில் பட்டு மீண்டும் களத்திற்குள் வந்தது.
இதனால் அல் நஸருக்கு கோல் என்பது சத்தியம் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் ரொனால்டோ தன்னிடம் பந்து வந்தபோது அவர் கோல் கீப்பரை Dribble செய்ய தவறினார்.
Ronaldo is so finished lmaooo pic.twitter.com/DjeF8gvkrh
— ??? ?? (@vinrmfc) August 18, 2023
இது அவரது ரசிகர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், மெஸ்சியின் ரசிகர்களோ ரொனால்டோவின் தவறுகளை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தோல்வி காரணமாக அல் நஸர் அணி தற்போது சவுதி புரோ லீக் தொடரில் 15வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |