கிரிக்கெட் மைதானத்தில் இப்படியா செய்வாங்க? பிரபல வீரரை கிண்டலடிக்கும் ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் உஸ்மான் கவாஜா சிட்னி தண்டர் அணிக்காக விளையாடினார். உஸ்மான் கவாஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அடிவயிற்றில் வைத்திருந்த கார்ட் (abdomen guard) மீது பந்து பலமாக தாக்கி உள்ளது.
இதனால் கார்ட்டை மாற்ற அவர் நினைத்துள்ளார். கள நடுவரிடம் இதை கூறி அடுத்த பந்து போடுவதற்குள் அவர் டிரெஸிங் ரூமிற்கு விரைந்து சென்று மாற்றியிருக்கலாம்.
Have ... have you ever seen this before ?
— 7Cricket (@7Cricket) January 31, 2021
Usman Khawaja had to change everything - on the field! ?#BBL10 pic.twitter.com/XOKsXkhLVS
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு பதில் மைதானத்திலேயே பேடு, ஷூ, பேண்டை அவிழ்த்து அங்கே தனது கார்ட்டை மாற்றினார்.
உஸ்மானின் செயலை பார்த்த டிவி வர்ணனையாளர்கள் அவர் என்ன செய்கிறார் என குழம்பி உள்ளனர். பின்னர் நாங்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை கிரிக்கெட் போட்டிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் எந்த வீரரும் இதுப்போன்று மைதானத்தில் கார்ட்டை மாற்றி பார்த்ததில்லை என்று கமெண்ட் செய்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலனாதை தொடர்ந்து ரசிகர்கள் உஸ்மானை கேலி செய்து பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.