முதல் பந்தில் விராட் கோஹ்லி டக்அவுட்! உலகக்கிண்ணத்தில் தொடர் சொதப்பலால் ரசிகர்கள் கிண்டல்
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி டக்அவுட் ஆனதால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
நியூயார்க்கில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதும் டி20 உலகக்கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய அமெரிக்க அணி 110 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நெட்ரவால்கர் வீசிய ஓவரில் கோஹ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். அவர் விக்கெட் கீப்பர் அன்ரியஸ் கோஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
Chokli fans were saying that you will troll Kohli in IPL and you will beg in international ???????
— DhoniFanRoshan ? (@MrRoshan124) June 12, 2024
KARMA pic.twitter.com/DprKAyYuRK
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கோஹ்லி, அயர்லாந்துக்கு எதிராக ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் தொடர்ந்து சொதப்பும் கோஹ்லியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், கோஹ்லியை விட பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளதாக கிண்டல் செய்துள்ளார்.
Arshdeep has more runs than Chokli in this WC, let’s all laugh at Chokli ??????????????????????????????????? pic.twitter.com/AJ5QZUwsrt
— Lubana Warriors (@LubanaS49) June 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |