12,445 கி.மீ பயணித்து ஆவலாக வந்த ரசிகர்! முதல் முறையாக டக்அவுட் ஆகி ஏமாற்றிய கோலி
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி டக்அவுட் ஆனது ரசிகர்ளை ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தியா பேட்டிங்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி இன்று லக்னோவில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனால் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக முதலில் துடுப்பாடுகிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (49 சதங்கள்) விராட் கோலி இன்றைய போட்டியில் எட்டிப்பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
கோலி ஏமாற்றம்
தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ஓட்டங்களில் அவுட் ஆக, விராட் கோலி களத்திற்கு வந்தார். ரசிகர்கள் இதனால் உற்சாகமடைந்தனர். அதன் பின்னர் பந்துகளை எதிர்கொண்ட கோலி ரன் எடுக்க தடுமாறினார்.
AP Photo
அணியின் ஸ்கோர் 27 ஆக இருந்தபோது வில்லி ஓவரிலில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து கோலி அவுட் ஆனார். மொத்தம் 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன் கணக்கை தொடங்காமலேயே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. விராட் கோலி தனது உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
இதற்கிடையில் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து 12,445 கிலோ மீற்றர் பயணம் செய்து வந்ததாக ஏந்திய பதாகை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை விராட் கோலி 287 போட்டிகளில் 48 சதங்கள் மற்றும் 69 அரைசதங்கள் அடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |