இவரை ஏன் சேர்க்கல? டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட வீரருக்கு ரசிகர்கள் ஆதரவு
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான 15 பேர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இடபெற்றிருந்தனர். ஆனால் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுலின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
I feel bad for #MayankAgarwal, he was the highest run scorer in the tournament with two double tons until his place got robbed after one bad series and we all knew that #KLRahul won't get a chance anyhow. I wish bcci would have sent them for SL tour ?? pic.twitter.com/XTeT2toxWz
— Hammid Saaho (@saaho_hammid) June 15, 2021
இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது. இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 1052 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 243 ரன்கள். அந்த வகையில், இந்த வருட தொடக்கத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
No Mayank Agarwal in the squad?
— Koushik P (@sillypoynt) June 15, 2021
Bevarsigala #WTCFinals https://t.co/sRcS3Kfwrb
ஆனால் அப்போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அணியில் அவர் சேர்த்து கொள்ளப்படவில்லை.
இதையடுத்து அது தொடர்பில் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மயங்கை சேர்க்காதது குறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Life Kinda , How Turned For Mayank Agarwal .
— Immanuel :-\ (@ComeOnKane) June 15, 2021
Before Australia Series , He Was Highest Runs Scorer For India And Best Opener .
He Just Failed in Australia Series And Though He Didn't All Chances in Australia .
And Now Didn't Named in Final Squad ? #INDvNZ #WTCFinals pic.twitter.com/YzVUIlhbxS