நன்றி மறந்த ஜடேஜா! இப்படி பண்ணலாமா? தோனி ரசிகர்கள் வேதனை
ஜடேஜா அளித்துள்ள ஒரு பேட்டி தோனி ரசிகர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களையும் புலம்ப வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஜடேஜா பேட்டிங் வரிசையில் 5வது வீரராக களமிறங்கி 18 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.
எப்போதும் பேட்டிங் வரிசையில் 7வது வீரராக களமிறங்கும் ஜடேஜாவுக்கு ரோகித் 5வது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கினார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, நான் இப்போது எல்லாம் ஒரு துடுப்பாட்ட வீரராக உணர்கிறேன்.
ரோகித் சர்மா தான் என் மீது நம்பிக்கை வைத்து 5வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய ரோகித்துக்கும், அணி நிர்வாகத்துக்கம் நன்றி என்றார்.
இதனிடையே, ஜடேஜாவை துடுப்பாட்ட வீரராக அடையாளப்படுத்தி அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கியது தோனி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று!
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜாவை நடுவரிசையில் களமிக்கி தோனி வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால், அது பற்றி ஜடேஜா வாய் திறக்காமல், ரோகித் சர்மாவை மட்டும் ஏகத்துக்கும் புகழ்வது தோனியின் முதுகில் குத்தும் செயல் என ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.