ரஹானே, புஜாராவை விட இவர் தான் மோசமா ஆடுறாரு! மொதல்ல இந்திய அணியில் இருந்து அவரை தூக்குங்க... விமர்சிக்கும் ரசிகர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரஹானே, புஜாரை விட மிக மோசமாக விளையாடி வரும் இந்திய வீரர் ஒருவரை அணியில் இருந்து தூக்கனும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன.
இந்திய அணியில் தற்போது உள்ள சீனியர் பேட்ஸ்மென்கள் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் அவர்கள் இருவரையும் தாண்டி இன்னொரு வீரரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரையும் தற்போது இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வீரர் வேறுயாருமில்லை இந்த இங்கிலாந்து தொடரில் மேட்ச் வின்னர் ஆக இருப்பார் என்று பலராலும் கூறப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான்.
5 இன்னிங்சில் சேர்த்து அவர் இன்னும் மொத்தம் 87 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அந்த அளவிற்கு மோசமான நிலையில் அவரது பேட்டிங் பார்ம் உள்ளது.
இதன் காரணமாக புஜாரா மற்றும் ரஹானேவோடு சேர்த்து பண்ட்டையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கத்துடன் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.