ஐபிஎல்! தொடர்ந்து உதைபடும் சி.எஸ்.கே அணி... மீண்டும் கேப்டனாகும் தோனி?
ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து உதைபடும் நிலையில் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ந்து படுதோல்வியடைந்துள்ளது. தற்போது எஞ்சியுள்ள 10 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கேவில் பிளே ஆப் பந்தயத்தில் இருக்க முடியும்.
ஆனால், ஜடேஜா தலைமையில் அப்படி ஒரு சாதனையை சிஎஸ்கே பெறுமா என்பது சந்தேகமே. கேப்டனாக செயல்பட போதிய சுதந்திரம் ஜடேஜாவிற்கு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால் ஒன்று சுதந்திரம் வழங்க வேண்டும், இல்லை கேப்டன் பதவியை விட்டு விலகி கொள்வதே சரியானதாக இருக்கும் என்று ஜடேஜா முடிவு எடுத்துள்ளார்.
இதன் காரணமாக இந்த சீசன் முடிவதற்குள் ஜடேஜா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கேப்டனாக தோனியையே செயல்பட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதே கோரிக்கையை தான் ரசிகர்களும் வைத்துள்ளனர். அதன்படி சிஎஸ்கேயின் 4வது தொடர் தோல்விக்குப் பிறகு எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாகத் திரும்ப வேண்டும் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The best course ahead for the CSK now:
— Chinese Chowkidaar (@DineshBajaj_) April 9, 2022
1. Sack Jadeja from captaincy.
2. Make Dhoni the captain for the rest of this season.
3. Ask Dhoni to retire after this season so that the money thus freed could be used to buy 2 good foreign players.