13 கோல்களில் இமாலய தோல்வி: ரசிகர்களுக்கு அணி நிர்வாகத்தின் நெகிழ்ச்சி செயல்
நெதர்லாந்தின் Den Bosch கால்பந்து அணி 13-0 என இமாலய தோல்வியை சந்தித்த நிலையில், அந்த அணி ரசிகர்களுக்கு தற்போது மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளது.
மார்ச் மாதம் நெதர்லாந்தின் Den Bosch கால்பந்து அணியும் PEC Zwolle அணியும் மோதியுள்ளது. இதில் Den Bosch கால்பந்து அணி 13-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
Image: Twitter
ஆட்டத்தை நேரில் பார்த்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயினர். பலர் தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில், அந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், ஆட்டத்தை நேரில் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் Den Bosch கால்பந்து அணி நிர்வாகம் தனித்தனியாக மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளது.
குறித்த கடிதத்தில், அணிக்கு விசுவாசமாக இருந்தமைக்கு அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளதுடன், முதல் பாதியில் 7-0 என அணி கடுமையான சரிவை சந்தித்த பின்னரும், விளையாட்டை கடைசி வரையில் பொறுமையாக கண்டுகளித்தது பாராட்டுக்கு உரியது என குறிப்பிட்டுள்ளது.
@getty
அந்த படு தோல்வியால் அணியின் மேலாளர் Jack de Gier அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். Den Bosch கால்பந்து அணியானது கடந்த 32 ஆட்டங்களில் 9ல் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.
மட்டுமின்றி நெதர்லாந்து தொழில்முறை கால்பந்து போட்டி வரலாற்றில் ஒரு அணி 13-0 என படுதோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.