ஜேர்மனியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி தேர்தலில் தோல்வி
ஜேர்மனியில் ஆளுங்கட்சி உட்பட பல கட்சிகளுக்கு திகிலை ஏற்படுத்திவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி சமீபத்திய தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி
சமீபகாலமாக புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது.
எலான் மஸ்க் போன்ற வெளிநாட்டு செல்வந்தர்கள் சிலரும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், மற்ற அரசியல் கட்சிகளும், நடுநிலைத்தன்மை கொண்ட மக்களும் அக்கட்சியின் வளர்ச்சியைக் கண்டு அச்சமுற்றுள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில், ஜேர்மனியின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான North Rhine-Westphalia மாகாணத்தில் நேற்று மேயர் தேர்தல்கள் நடைபெற்றன.
சமீபத்திய ஆய்வு முடிவுகள் AfD கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், இப்போது ஜேர்மனியில் தேர்தல் நடைபெறுமானால், AfD கட்சி பிரதான கட்சியாக உருவெடுக்கும் என்றும் கணித்திருந்தன.
ஆனால், மேயர் தேர்தல்களில் AfD கட்சி தோல்வியடைந்துள்ளது. ஆளும் கூட்டணிக்கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
என்றாலும், AfD கட்சிக்கான வாக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளதை மறுப்பதற்கில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |