நடந்தேவிட்டது... மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
Anti immigrant party claims crushing victory in east German state vote: மாகாணத் தேர்தல் ஒன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நேற்று நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் நேற்று, அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

அதைத் தொடர்ந்து, தான் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாக தெரிவித்திருந்தார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.
ஆனால், தேர்தலில் 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஆளும், சேன்ஸலர் மெர்ஸின் CDU கட்சிக்கோ 18 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துள்ளன.
அதனால், AfD கட்சிக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பதற்காக கைகோர்த்த பல்வேறு கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
AfD கட்சியோ, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |