ஜேர்மனியின் மாகாணத் தேர்தலில் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்

Election
By Arbin Sep 01, 2024 08:01 PM GMT
Report

ஜேர்மனியில் முதல் முறையாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று மாகாணத் தேர்தலில் வெற்றியை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் மக்களுக்கு

ஜேர்மனியில் கடந்த 2013ல் உருவான AfD கட்சியே தற்போது மாகாணத் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளது. புலம்பெயர் மக்களுக்கு எதிரான, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சியாகும் இந்த AfD.

ஜேர்மனியின் மாகாணத் தேர்தலில் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் | Far Right Party State Election First Time

தற்போது ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில் அதிக வாக்குகளை AfD கட்சி கைப்பற்றும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் 23.4 சதவிகித வாக்குகளை கைப்பற்றியிருந்த AfD கட்சி தற்போது 33.5 சதவிகித வாக்குகள் வரையில் பெறலாம் என்றும்,

CDU கட்சி 24.5 சதவிகித வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒரு மாகாணத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என கூறுகின்றனர்.

ஆனால் AfD கட்சியால் ஆட்சியை கைப்பற்றுவது சுலபமல்ல என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பிரான்சில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே நிலை AfD கட்சிக்கும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, Saxony மாகாணத்திலும் AfD கட்சி சிறந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. CDU கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்ற, AfD கட்சி இரண்டாமிடத்தில் வந்துள்ளது.

ஆயுத ஏற்றுமதி தடை

கடந்த 30 ஆண்டுகளாக Saxony மாகாணத்தை CDU கட்சியே ஆட்சி செய்து வருகிறது. தேசிய அளவில் முதன்மையான எதிர்க்கட்சியாக உள்ள CDU கட்சி Saxony மாகாணத்தில் 32 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

ஜேர்மனியின் மாகாணத் தேர்தலில் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் | Far Right Party State Election First Time

ஆனால் 31.5 சதவிகித வாக்குகளுடன் AfD கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. Saxony மாகாணத்தில் வாக்களிக்க தகுதியான மக்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என்றும் Thuringia மாகாணத்தில் 1.7 மில்லியன் பேர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் மற்றும் உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவரும் BSW கட்சி இந்த இரண்டு மாகாணத்திலும் மூன்றாமிடத்தில் வந்துள்ளது.

இதனிடையே, தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 2025 செப்டம்பர் மாதம் பெடரல் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US