ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு: அவர் பதவியேற்றதும் மக்கள் கேட்ட கேள்வி
எளிமையானவர் என பெயரெடுத்தவரான, ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 81.
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு
ஜேர்மனியின் மாகாணச் செயலர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் என பல பதவிகள் வகித்தவர் ஹோர்ஸ்ட் கோலெர் (Horst Köhler).
இப்படி பல பதவிகள் வகித்தும், கோலெர் ஜேர்மனியின் ஜனாதிபதியாக பதவியேற்கும்போது, மக்களில் பலருக்கு அவரைத் தெரியவில்லையாம்.
பிரபல ஊடகம் ஒன்று, யார் இந்த கோலெர் என கேள்விக்குறியுடன் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம்.
அதாவது பெரிய பொறுப்புகள் வகித்தும், மிகவும் எளிமையானவராக இருந்தாராம் கோலெர்.
பின்னர், ராணுவம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்க, தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார் கோலெர்.
இருந்தும், உலக பொருளாதார நெருக்கடியின்போது அவர் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கையாண்ட விதத்தால், 70 சதவிகிதத்துக்கும் அதிகமான ஜேர்மானியர்கள் கோலெர் ஒரு ஜனாதிபதியாக பணியாற்றிய விதம் திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
அதற்குப் பிறகும் வெளிவிவகாரங்கள் விடயத்தில் பல பொறுப்புகள் வகித்துவந்த கோலெர், தனது 81ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கோலெருக்கு, ஈவா லூயிஸ் என்னும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |