கோழிகளைக் கொன்ற காட்டுப்பூனையைப் பிடித்த விவசாயி: அவர் செய்த செயலை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கோழிப்பண்ணையிலிருந்து கோழிகளைத் திருடிய காட்டுப்பூனை ஒன்று விவசாயி ஒருவரிடம் வசமாக சிக்கியது.
வழக்கமாக, இப்படி தனது வருமானத்தை அழித்த ஒரு காட்டு விலங்கை பிடித்தால் விவசாயிகள் என்ன செய்வார்கள்?
சுட்டுக் கொல்வார்கள் அல்லது கோபமாவது அடைவார்கள் அல்லவா? ஆனால், Chris Paulson என்னும் அந்த விவசாயி, இவைகளில் எதையும் செய்யவில்லை. அந்த காட்டுப்பூனையை கழுத்தைப் பிடித்துத் தூக்கிய Paulson, அதற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
உன்னால் எனக்கு எவ்வளவு நஷ்டம் பார் என்று காட்டுப்பூனையிடம் கூறிய அவர், இனிமேல் இங்கே வரக்கூடாது என செல்லமாக அதை எச்சரித்து, அதை கொண்டுபோய் தூரமாக புதர்கள் அடர்ந்த ஒரு இடத்தில் விட்டுவிட்டு வந்துள்ளார்.
அத்துடன், அந்த காட்டுப்பூனை மிகவும் மெலிந்திருந்ததால், அது கொன்ற இரண்டு கோழிகளையும் அதன் பக்கத்திலேயே போட்டுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் Paulson.
நாம் இயற்கை சங்கிலியில் இணைந்திருக்கிறோம், இரை கிடைக்கும் இடத்தில் அதை உண்ண வரும் விலங்குகளும் இருக்கத்தான் செய்யும் என்கிறார் Paulson. ஆனால், வன பாதுகாப்பு அலுவலரான Jeff Palm, Paulson செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.
முதலாவது, காட்டுப்பூனைகள் காட்டு விலங்குகள், அவை தாக்கக்கூடியவை, அதைப் பிடித்தால் கைகளை இழக்கும் அபாயம் கூட உள்ளது என்று கூறுகிறார் அவர்.
அதேபோல், Paulson செய்தது, சட்டப்படி பார்த்தால் குற்றம் என்கிறார் அவர். காரணம், ஒரு வன விலங்கை பிடித்து வேறொரு இடத்துக்கு கொண்டு செல்வது விலங்குகள் கடத்தல் குற்றமாக கருதப்படும், அதற்கு அபராதம் உண்டு என்கிறார் அவர்.