அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி
ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர் வெறும் 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார்.
10 ரூபாய் பிரியாணி
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், ஏலூரு மாவட்டம், தெந்துலூரு பகுதியை சேர்ந்த விவசாயி சிவாஜி. இவர் தன்னிடம் உள்ள விவசாய நிலத்தில் இயற்கையான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளார்.
இதனிடையே, நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வதையும் பார்த்துள்ளார். மேலும், அவர்கள் உணவு கிடைக்காமல் செல்வதையும் பார்த்துள்ளார்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று சிவாஜி நினைத்துள்ளார். இதனால், தனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்த அரிசி மற்றும் காய்கறிகளை வைத்து 5 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கி வந்துள்ளார்.
ஆனால், இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது கடந்த ஒரு வாரமாக 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார்.
இதில் உணவு சுவையாக இருப்பதால் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பிரியாணி வாங்கி செல்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |