ரூ.1 லட்சம் கட்டுமாறு கரண்ட் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்த விவசாயி!
தமிழக விவசாயியிடம் மின் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்துமாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிக மின் கட்டணம்
கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான கே.சி.பட்டியில் விவசாயமே பிரதான தொழில் என்பதால் சிங்கிள் பேஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களாக இங்கு குறைவான அளவு மின்சாரம் பயன்படுத்தினாலும் அதிக தொகை மின் கட்டணம் கட்டுமாறு நோட்டீஸ் வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.
இங்குள்ள விவசாயியான இளையராஜா என்பவருக்கு 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு மின் கட்டணமாக ரூ.1, 01,333 செலுத்துமாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளையராஜா மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், குறிப்பிடப்பட்ட தொகையை கட்டாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் விவசாயி கவலையடைந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், "சில நாட்களாகவே வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருகிறது. இதற்கு டிஜிட்டல் மின் மீட்டர் காரணமா என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |