முகேஷ் அம்பானியுடன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்த தமிழர்: அவரது சொத்து மதிப்பு
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக கோயம்புத்தூர் தமிழர் ஒருவர் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் கே.பி.ராமசாமி
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
வியாழக்கிழமை வெளியான இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார், ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் KPR ஆலையின் நிறுவனர் மற்றும் தலைவரான கே.பி.ராமசாமி.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ.9,143 கோடி என்றே கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கே.பி.ராமசாமி 100வது இடத்தில் உள்ளார்.
74 வயதான ராமசாமி வேளாண் குடும்பத்தை சேர்ந்தவர். விவசாயி மகனான இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றை நிறுவி வெற்றி கண்டுள்ளார்.
1984ல் KPR ஆலை நிறுவப்பட்டுள்ளது. 2013 முதம் தமது தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கில் சர்க்கரை ஆலையும் நிறுவியுள்ளார்.
30,000 தொழிளாளர்கள்
சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதோடு கூடுதலாக, KPR ஆலை காட்டன், பாலியஸ்டர் மற்றும் பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது.
ராமசாமி மற்றும் அவரது இரு சகோதரர்களால் முன்னெடுக்கப்படும் இந்த ஆலையில் சுமார் 30,000 தொழிளாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கேபிஆர் ஆலை ஒவ்வொரு ஆண்டும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |