விளை நிலத்தில் ரூ.500 நோட்டுகளை விதைத்த விவசாயி: இணையத்தில் வைரலாகும் போராட்டம்
விவசாய நிலத்தில் ரூ.500 நோட்டுகளை விதைத்து போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விவசாய நிலத்தில் ரூ.500 நோட்டுகளை விதைத்த நபர்
ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ரூ.500 நோட்டுகளை விதைத்து விநோதமான போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
வயல் நிலம் நாசமான நிலையில் அதற்கான பயிர்க் காப்பீட்டு கிடைக்காததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

ரூ.500 நோட்டுகளை விதைத்து விவசாயி நடத்திய விநோதமான இந்த போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
கிடைக்காத பயிர் காப்பீடு
நாகெளர் மாவட்டத்தின் தியோரியா ஜாதன் கிராமத்தை சேர்ந்த மல்லாராம் பவாரி என்ற விவசாயி, வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று தன்னுடைய நிலத்தில் பருத்தியை சாகுபடி செய்துள்ளார்.
किसान ने उगाए 500- 500 के नोट
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) November 27, 2025
नागौर के देवरिया जाटान गांव में किसान मल्ला राम बावरी ने फसल खराब होने और बीमा क्लेम न मिलने से नाराज़ होकर अपने खेत में 500-500 रुपये के नोट बो दिए. इस अनोखे विरोध का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है#Rajasthan pic.twitter.com/TW3zAkDi1b
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மழைப்பொழிவு அதிக அளவு பெய்ததால், விளை நிலம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் பயிர் நாசமாகியாது.
கடுமையான உழைப்பை கொடுத்தும் ரூ 4,000 மதிப்புள்ள சொற்ப விளைச்சலே கிடைத்ததால், அவர் பயிர் காப்பீட்டு தொகைக்கு முறையிட்டுள்ளார்.
ஆனால் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காததால் மல்லாராம் பவாரி இந்த வினோதமான போராட்டத்தை நடத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |