வெங்காய விளைச்சலுக்கு ரூ.66,000 செலவிட்ட விவசாயி.., ஆனால் கிடைத்ததோ வெறும் ரூ.664 மட்டுமே
வெங்காய விளைச்சலுக்கு ரூ.66,000 செலவிட்ட விவசாயிக்கு வெறும் ரூ.664 மட்டுமே கிடைத்ததால் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிக்கு கவலை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புரந்தரைச் சேர்ந்த விவசாயி சுதம் இங்க்லே. இவர் கடந்த வாரம் உள்ளூர் சந்தைக்கு வெங்காயத்தை எடுத்துச் சென்றபோது, 7.5 குவிண்டால் விளைச்சலுக்கு வெறும் ரூ.1,729 மட்டுமே பெற்றுள்ளார்.
மேலும், விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால், போக்குவரத்து மற்றும் எடை கட்டணங்களைக் கழித்த பிறகு அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இடைவிடாத மழை அவரது பெரும்பாலான பயிரை அழித்துவிட்டது.
"எனது வெங்காயப் பயிர் சாகுபடிக்கு சுமார் ரூ.66,000 செலவிட்டேன்" என்று தனது வயலில் நின்று கொண்டு கூறினார் இங்க்லே.
மேலும், இன்னும் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள வெங்காயங்களை ரோட்டார் மூலம் இயக்கி உரமாக மாற்றுவேன். அது விற்பதை விட லாபகரமானது என்றார்.
மகாராஷ்டிரா முழுவதும் பெய்த இடைவிடாத மழையால் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளன. அதே நேரத்தில் விலைகள் சரிந்து விவசாயிகளுக்கு லாபம் ஏதும் ஏற்படவில்லை.
இங்க்லே 393 கிலோ வெங்காயத்தை ஒரு கிலோ ரூ.3 விலையிலும், 202 கிலோ ரூ.2 விலையிலும், 146 கிலோ ரூ.10 விலையிலும் விற்று, செலவுகளுக்கு முன் ரூ.1,729 சம்பாதித்தார்.
இதில் போக்குவரத்து, சுமை ஏற்றுதல் மற்றும் எடையிடுதலுக்கு ரூ.1,065 செலுத்திய பிறகு, அவரது நிகர வருவாய் ரூ.664 மட்டுமே.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |