ஆடி காரில் வந்து கீரை விற்கும் விவசாயி! வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலம், கேரளாவில் சொகுசு காரில் வந்து கீரை விற்பனை செய்யும் விவசாயியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
சொகுசு காரில் வந்து கீரை விற்பனை
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் என்ற விவசாயி தனது வெள்ளை நிற ஆடி காரில் மார்க்கெட்டுக்கு வருகிறார். அங்கு வந்து காரில் இருந்து இறங்கிவிட்டு தனது ஆடையை மாற்றுகிறார்.
அவர், தான் அணிந்திருக்கும் லுங்கியை கழற்றிவிட்டு, காய்கறி விற்பனையாளர் போல மாறுகிறார். அதாவது, தன்னுடைய பேன்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்த பிறகு ஆட்டோவில் இருந்து பிளாஸ்டிக் விரிப்பை எடுத்து மார்க்கெட் தரையில் விரிக்கிறார்.
இதன் பிறகு, அதில் கீரை கட்டுகளை அடுக்கி விற்பனை செய்ய தொடங்குகிறார். அப்போது, கடைசி கீரையையும் விற்றுவிட்டு, தனது லுங்கியை மாற்றிவிட்டு, பிளாஸ்டிக் விரிப்பை ஆட்டோவில் போட்டுவிட்டு ஆடி காரில் செல்கிறார்.
வைரல் வீடியோ
தற்போதைய காலத்தில் விவசாயி என்றாலே அவருக்கு பிரச்சனை தான் இருக்கும் என்ற சூழலில் ஆடி காரில் விவசாயி ஒருவர் கீரை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரள விவசாயியான சுஜீத், 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகவும், மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |