டி20 உலகக்கிண்ணம்: இலங்கையின் ஹசரங்கா சாதனையை முறியடிக்கப்போகும் வீரர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உலக சாதனை படைக்க உள்ளார்.
நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஃபஸல் ஹக் ஃபரூக்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் இதுவரை 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா (11) உள்ளார்.
செயிண்ட் வின்சென்ட்டில் நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், இலங்கையின் வணிந்து ஹசரங்கா சாதனையை முறியடிப்பார்.
அதாவது, டி20 உலகக்கிண்ண தொடரின் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை (16) கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஹசரங்கா தன்னகத்தே வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |