5 நிமிடத்தில் முழு சார்ஜ்! Realme நிறுவனத்துடன் மோதும் Redmi மொபைல்
Realme போன்களுக்கு போட்டியாக 5 நிமிடத்தில் சார்ஜ் செய்யப்படும் போன்களை தயாரிக்க Redmi நிறுவனம் களமிறங்கியுள்ளது.
10 நிமிடத்தில் சார்ஜ்
செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல் மீ, 10 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் சக்தி வாய்ந்த சார்ஜர்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் 4600 MAH பேட்டரி திறன் கொண்ட செல்போன்கள் 240 வாட்ஸ் சார்ஜர்கள் மூலம் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்யப்படுகிறது.
இந்த அதிவேக சார்ஜர்கள் மக்களை அதிக அளவு ஈர்த்துள்ள நிலையில், Realme போன்களின் விற்பனையும் சந்தையில் அதிகரித்துள்ளது.
போட்டியில் களமிறங்கும் ரெட்மி
இந்நிலையில் Realme போன்களின் சார்ஜர்களுக்கு போட்டியாக, 5 நிமிடத்தில் முழு சார்ஜ் செய்யும் அதிக சக்தி வாய்ந்த சார்ஜர்களை உருவாக்க ரெட்மி செல்போன் நிறுவனம் களத்தில் இறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
4,500 MAH பேட்டரி திறன் கொண்ட ரெட்மி போன்களை சார்ஜ் செய்வதற்காக 300 வாட்ஸ் சார்ஜர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.