வன்ஸ் பேடிக்கு பதில் CSK-வில் இணைந்த அதிவேக சதமடித்த இந்தியர் - யார் இந்த உர்வில் படேல்?
வன்ஸ் பேடி விலகல்
2025 ஐபிஎல் தொடரில், சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வென்று, 8 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில், CSK வீரர் வன்ஸ் பேடி காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
CSK வில் இணைந்த உர்வில் படேல்
அவருக்கு பதிலாக உர்வில் படேல் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். கடந்த வாரம், திறன் பரிசோதனைக்காக உர்வில் படேலை சென்னை அணி அழைத்திருந்தது.
Say Yellove to Urvil Patel! 💪🏻💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2025
PS: This young lion has the joint fastest 💯 in the Syed Mushtaq Ali Trophy to his credit!
Roar loud and proud, Urvil! 🦁🥳#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/hxyOzWVSnP
இதில், உர்வில் படேல், 20 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 41ஓட்டங்களையும், 2 வது வாய்ப்பில் 20 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் அரை சதமும் அடித்ததாக கூறப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த உர்வில் படேல், 2024-25 சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில், திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் விளாசி, T20 போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
Who's 𝗨𝗥𝗩𝗜𝗟?? 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2025
We show You! 🥳
Joint Fastest century by an Indian in T20s! #WhistlePodu #Yellove🦁💛
pic.twitter.com/2oBZ2ykQYn
உர்வில் படேல், இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை. தற்போது, சென்னை அணி அவரை ஆரம்பவிலையான ரூ.30 லட்சத்திற்கு அணியில் இணைத்துள்ளது.
வரும் மே 7 ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டியில், உர்வில் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |